Wednesday, August 24, 2011

vinayagan varugave!

                                                      விநாயகனே  வருகவே!
                                                              பல்லவி 
கழல்  பதம் பணிந்தேன் கரிவதனா - கருணை 
நிழல்  தர  வேண்டும்  நாயகனே                           
                                                    அனு பல்லவி
அழலென  தகிக்கும்  துயர் துடைப்பாய் 
சுழல்  ஞானம்  காக்கும் சக்தி  மைந்தா 
                                                   சரணம்
மாய  வாழ்வினில் மயங்கியே  மாய்ந்திடாது
தூய  நின்னடி  வணங்குதல்     வேண்டுமே 
நேயன்  நின்னடி  நினைத்தலை  அன்றியே 
சேயன்  எனெக்கென்ன  வேண்டும் இவ்வுலகிலே   (கழல்
                                               -கலாவதி  ரெங்கசாமி



   (கலாவதி  ரெங்கசாமி  எழுதிய   தேவியர்  பெருமை  - நவராத்திரி  பாடல்கள்  என்ற  புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது  அதன்  துவக்க  பாடல்).

Saturday, August 20, 2011

Janmashtami

ராகம்-ரீதி கௌள                        தாளம்- ஆதி 
பல்லவி 
என்னதான் மாயம்  செய்தாய் மாயவனே 
உன்  சின்ன வாய்  திறந்து  உலகை  காட்டிடவே
அனு பல்லவி
பாலுறை  வெண்ணையை  உண்டாய்  பாலகனே -இந்த 
பாரெல்லாம்  தெரிய என்ன வித்தை செய்தாய் 
சரணம் 
உரலிலே  கட்டினாள் உன் அன்னை உனையே 
உனக்கின்னும்  ஏன்தான்  கள்ளம்  போகவில்லை 
அரவத்தின் மீதேறி  ஆடுகிறாய்  கண்ணா
அதுவென்ன  நர்த்தன  களமோ மாயவனே
(என்னதான்  மாயம்)
-பாடல்: கலாவதி  ரெங்கசாமி 
(ஒலி பதிவு செய்ய பட்டது -நிருத்யமாலிக என்ற  புத்தகத்தில்  இடம் பெட்ட்றது.