Tuesday, April 17, 2012

Samayapuram paamaalai
raga:Annadhabharavi                                   thala:Adi 

Lyrics:Kalaavathy Rengasamy.

samayapuram paamaalai

 
Posted by Picasa

Thursday, April 12, 2012

நந்தன ஆண்டு நலம் தரும் ஆண்டு 
சிந்தனை யாவும் சிறந்திடும் ஆண்டு 
வந்தனை செய்தே வரவேற்றிடுவோம் 
செந்தமிழ் ஆண்டின் சித்திரைத்  திங்களை. -கலாவதி ரெங்கசாமி 

Wednesday, November 16, 2011

PANCHA BHOOTHA STHALANGAL -Thiruvaanaikka(cont.)

                                                பல்லவி
அப்புத்தல  அய்யனே  நிதம்  நின்னடி  போற்றினேன்
செப்பு  மொழி  யாவும்  நின் நாமமாக  வேண்டினேன்
                                              அனு பல்லவி
முப்புரமெரித்த  முதல்வனே  முழுமுதல்  ஈசனே
எப்போதுமென்  சிந்தையுரை  திருவானைக்கா வாசனே
                                         சரணம்
இப்புவி மேவும்  ஐம்பூதங்களின்  அரசனே
எப்போதும்  நீருரைகின்ற  ஜம்புகேசனே
தப்பாது   நித்தம்  நின் பாதம்  போற்றிடவே
அப்பனே  நீஎன்றும்  அருளவாயே  ஆண்டவனே
                               -kalaavathy rengassamy 

PANCHA BHOOTHA STHALANGAL -Thiruvaanaikka(cont.)

ஸ்ரீ சக்ர நாயகி :

        அன்னை  அகிலாண்டேஸ்வரி   அணிந்திருக்கும்  காதணிகள்  இரண்டும்  இரு ஸ்ரீ  சக்ரங்களாகும்.  ஆதியில்  அன்னை மிக  உக்கிரமுள்ளவளாக  விளங்கினாள்.  அன்னையின்   உக்கிரஹத்தை தணிக்க  ஆதி  சங்கரர்  இரண்டு  ஸ்ரீ  சக்ரங்களை  அம்பாளின்  காதுகளில்  அணிவித்தார்.  அவை  இரண்டும்   அன்னையின்  காதுகளில்  தோடுகளாக விளங்குகின்றன. இச்சக்ரத்தை   அணிவித்த பின்பு  அம்பாள்  உக்ரஹம்  தணிந்து  அருள் பாலிக்கிறாள்.   இது  வேறு  எந்த  ஆலயத்திலும்  இல்லாத  அதிசயமாகும்.

Thursday, October 27, 2011

PANCHA BHOOTHA STHALANGAL

      பஞ்ச பூத ஸ்தலங்கள் -திருவானைக்கா(தொடர்ச்சி) ..............
இத்தலத்திற்கு  ஆனைக்கா  எனப்பெயர்  ஏற்பட்டதற்கு  புராணக்கதை  ஒன்று  உண்டு.  
            காட்டில்  வசித்து  வந்த  ஓர் யானை  முன்னைபயனால்  ஒரு  சிவலிங்கத்தைக் கண்டது.  லிங்கத்தைக்  கண்ட  நாள்  முதலாய்  தினமும்   காவிரியில்  நீராடி  தன் தும்பிக்கையில்  நீரைக் கொண்டு  வந்து  லிங்கத்திற்கு  நீராட்டி, பூக்களை  பறித்து  பூஜித்து,  காய்கனிகளை  பறித்து  நிவேதனம்  செய்து 
அன்றாட  பூஜை  செய்து  வந்தது.  அதே  சமயம், வெண்ணாவல்  மரத்தில்  வசிக்க தொடங்கிய  சிலந்தி  ஒன்று,  தானும்  சிவலங்கத்திற்கு  ஏதாவது  செய்ய  நினைத்து  தன்  வாய்  நூல்  கொண்டு  பந்தலமைத்து  லிங்கத்தை  காத்தது.  லிங்கத்தை  விட உயரமான இடத்தில், அதாவது மரத்தின்  மேல்  தான்  அமர்ந்திருந்தால்  அபசாரம்  என்றெண்ணி  அங்கிருந்து  அகன்றது. 
     வழக்கப்படி  லிங்கத்தை  பூஜிக்க  அங்கு வந்த யானை சிலந்தி வலையை  பார்த்து  கோபமுற்று   அதனை தன்  தும்பிக்கையினால்  பிய்த்து  எறிந்தது  சிலந்தியின்   எச்சிலை  தீண்டிய  துதிக்கையினால்  பூசித்தல்  அபசாரம்  எனக்கருதி  குளிக்க சென்றது.  அவ்வேளையில்  சிலந்தி  மறுபடியும்  வலை பின்னியது.  யானையும்  சிலந்தியும்  மாறி  மாறி  இவ்வாறு  செய்து கொண்டிருந்தது.  
            ஒருநாள்  சிலந்தி  வலை   பின்னிக்  கொண்டிருந்த  பொழுது,  யானை  வந்து  வழக்கம் போல  வலையை  தும்பிக்கையால்  கலைத்தது. சிலந்திக்கு  
கோபம் வந்து  யானையின்  துதிக்கை வழியாக  புகுந்து,  யானையின்  தலை  உச்சியில்  கடித்தது.  யானையின்  உச்சியாகிய உயிர் நிலையல் சிலந்தி  கடித்ததால்  யானையின்  உயிர் பிரிந்தது.  யானை உயிரற்று  படுத்து விட்டத்தால்   சிலந்தியும்  வெளியே வர முடியாது  இறந்து விட்டது.  
          சிவத்தொண்டு  செய்யும்  பணியில்   இரண்டு  ஜீவன்களும்  இறந்ததால் 
சிவ பெருமான் லிங்கத்திலிருந்து  வெளிப்பட்டு  யானை கைலாயத்திலிருக்கும்
பூத கணங்களுக்கு  தலைமை ஏற்கவும்,  சிலந்திக்கு  சோழ  மன்னனாக  பிறக்கும்  படியும்  வரமளித்தார்.  
          அன்றுமுதல்  இத்தலம் ஆனைக்கா என்றும்  திருவானைக்கா என்றும்  வழங்கப்படுகிறது.   யானைக்கு  வட மொழியில்  கஜம்  என்று பெயர்.  அது கொண்டு  கஜாரண்யம்  என்றும்  இத்தலம்  அழைக்கப்படுகிறது.  (தொடரும்)

Monday, October 24, 2011

PANCHA BHOOTHA STHALANGAL

                                    தல  வரலாறு 
 திருச்ச்ராபள்ளியின்  புனித  தலங்களில்  ஒன்றான இத்திரு தலம் பஞ்ச பூத தலங்களில் நீர்தலமாகும்.   (பஞ்ச பூதங்கள்:- நீர்,  நிலம், ஆஹாயம், வாயு,  அக்னி).   இது  திருச்சிராப்பள்ளி  மாவட்டத்தில்  திருவரங்கம்  வட்டத்தில்  அமைந்துள்ளது.  
              இக்கோவில்  சுமார்  2500  ஆண்டுகளுக்கு  முன்னர் கோச்செங்கட் சோழ மன்னனால்  கட்டப்பட்டது. 
               இத்தலம்  ஞான பூமி, ஞானத்தலம்,  ஞநேந்திரம்  எனவும்  அழைக்கபடுவதால்  இது  மெய்ஞானம்  அருளும்  மேன்மை  தலமென  உணரலாம்.   இத்தல  நாயகியின்  நேர் பின்புறம்  ஞான சக்தியருளும்  திருவுரு  ஸ்தாபிக்க  பட்டுள்ளதாலும் இவ்வுண்மை  புலப்படும்.  

              இத்திருத்தலம்  திருவானைக்கா  அல்லது  திருவானைக்கோவில்,  ஜம்புகேஸ்வரம்,  அமுதேச்வரம், கஜாரண்யம், சம்புவனம்,  வெண்ணாவல்  வனம்  எனப்  பல  பெயர்களால்  அழைக்கப்படுகிறது. 
                   வெண்ணாவல்   வனம்  எனும்  பெயர் பெற்றதற்கு  காரணமான  புரானக்கூற்று   என்னெவெனில்  சம்புமாதவன்   என்னும்  முனிவர்  நாவற்காட்டில்   தவமேற்கொண்டிருந்த்கார்.   ஒருநாள்   அவர்  தவமியற்றி  கொண்டிருக்கும்  பொழுது  அவர் மடியில்  ஓர்  வெண்ணாவர் பழம்  விழுந்தது. 
சிவ பக்தனாகிய   அம்முனி  தன்  மடியில் விழுந்த  நாவற் பழத்தை  எடுத்துகொண்டு   கைலை   நாதனாகிய  சிவ பெருமானின்   இருப்பிடமான  திருக்கைலையை   அடைந்து,   சிவபெருமானிடம்  அப்பழத்தை  கொடுத்தார். 
சிவபெருமானும்   அதனை  ருசித்து   சாப்பிட்டு விட்டு,  அதன்  கொட்டையை உமிழ்ந்தார்.  உமிழ்ந்த  அக்கொட்டையை  பிரசாதமாக  எண்ணி  சம்புமாதவன் 
அதனை  சாப்பிட்டார்.  அக்கொட்டை  சம்பு  மாதவனின்  வயிற்றில்  முளைக்கத்    தொடங்கிற்று.  பெரியதோர்  நாவல்  மரமாக  கிளைவிட்டது. 
இதைக்கண்ட  சம்புமாதவன்  செய்வதறியாது  ஆண்டவனை  அடிபணிந்து   வணங்கினார்.  சம்புமாதவன்  தன்  மீது  கொண்ட  பக்தியின் ஆழத்தை  உணர்ந்த  ஆண்டவன்  "நீ  பூலோகம் சென்று  அங்கு  புனித  பூமியான  பாரதத்தில்   காவிரிக்கரையில்   அமைந்த  நாவற்காட்டில்,   பராசக்தியின்  அருள்பெற்று  ஞானம்  பெற   தபசிகள்  தவமியற்றும்  புனித  இடந்தனில்  சென்று   இருப்பாயாக.  நான்  உன் வயிற்றில்  வளரும்  அம்மரத்தடியில் லிங்க 
வடிவாக  தங்கி  அருள் புரிவேன்"  என்றார்.  எனவே இத்தலம், 'வெண்ணாவர் வனம்'  என வழங்கபடுகிறது.  முனிவர் 'சம்பு மாதவனின்' வயிறில்  வளர்ந்த வெண்ணாவல்  மரமே  தல  விருட்சமானதால்  'ஜம்புகேஸ்வரம்'  எனவும்  அழைக்க  படுகிறது.                       (தொடரும்)