Monday, October 24, 2011

PANCHA BHOOTHA STHALANGAL

                                    தல  வரலாறு 
 திருச்ச்ராபள்ளியின்  புனித  தலங்களில்  ஒன்றான இத்திரு தலம் பஞ்ச பூத தலங்களில் நீர்தலமாகும்.   (பஞ்ச பூதங்கள்:- நீர்,  நிலம், ஆஹாயம், வாயு,  அக்னி).   இது  திருச்சிராப்பள்ளி  மாவட்டத்தில்  திருவரங்கம்  வட்டத்தில்  அமைந்துள்ளது.  
              இக்கோவில்  சுமார்  2500  ஆண்டுகளுக்கு  முன்னர் கோச்செங்கட் சோழ மன்னனால்  கட்டப்பட்டது. 
               இத்தலம்  ஞான பூமி, ஞானத்தலம்,  ஞநேந்திரம்  எனவும்  அழைக்கபடுவதால்  இது  மெய்ஞானம்  அருளும்  மேன்மை  தலமென  உணரலாம்.   இத்தல  நாயகியின்  நேர் பின்புறம்  ஞான சக்தியருளும்  திருவுரு  ஸ்தாபிக்க  பட்டுள்ளதாலும் இவ்வுண்மை  புலப்படும்.  

              இத்திருத்தலம்  திருவானைக்கா  அல்லது  திருவானைக்கோவில்,  ஜம்புகேஸ்வரம்,  அமுதேச்வரம், கஜாரண்யம், சம்புவனம்,  வெண்ணாவல்  வனம்  எனப்  பல  பெயர்களால்  அழைக்கப்படுகிறது. 
                   வெண்ணாவல்   வனம்  எனும்  பெயர் பெற்றதற்கு  காரணமான  புரானக்கூற்று   என்னெவெனில்  சம்புமாதவன்   என்னும்  முனிவர்  நாவற்காட்டில்   தவமேற்கொண்டிருந்த்கார்.   ஒருநாள்   அவர்  தவமியற்றி  கொண்டிருக்கும்  பொழுது  அவர் மடியில்  ஓர்  வெண்ணாவர் பழம்  விழுந்தது. 
சிவ பக்தனாகிய   அம்முனி  தன்  மடியில் விழுந்த  நாவற் பழத்தை  எடுத்துகொண்டு   கைலை   நாதனாகிய  சிவ பெருமானின்   இருப்பிடமான  திருக்கைலையை   அடைந்து,   சிவபெருமானிடம்  அப்பழத்தை  கொடுத்தார். 
சிவபெருமானும்   அதனை  ருசித்து   சாப்பிட்டு விட்டு,  அதன்  கொட்டையை உமிழ்ந்தார்.  உமிழ்ந்த  அக்கொட்டையை  பிரசாதமாக  எண்ணி  சம்புமாதவன் 
அதனை  சாப்பிட்டார்.  அக்கொட்டை  சம்பு  மாதவனின்  வயிற்றில்  முளைக்கத்    தொடங்கிற்று.  பெரியதோர்  நாவல்  மரமாக  கிளைவிட்டது. 
இதைக்கண்ட  சம்புமாதவன்  செய்வதறியாது  ஆண்டவனை  அடிபணிந்து   வணங்கினார்.  சம்புமாதவன்  தன்  மீது  கொண்ட  பக்தியின் ஆழத்தை  உணர்ந்த  ஆண்டவன்  "நீ  பூலோகம் சென்று  அங்கு  புனித  பூமியான  பாரதத்தில்   காவிரிக்கரையில்   அமைந்த  நாவற்காட்டில்,   பராசக்தியின்  அருள்பெற்று  ஞானம்  பெற   தபசிகள்  தவமியற்றும்  புனித  இடந்தனில்  சென்று   இருப்பாயாக.  நான்  உன் வயிற்றில்  வளரும்  அம்மரத்தடியில் லிங்க 
வடிவாக  தங்கி  அருள் புரிவேன்"  என்றார்.  எனவே இத்தலம், 'வெண்ணாவர் வனம்'  என வழங்கபடுகிறது.  முனிவர் 'சம்பு மாதவனின்' வயிறில்  வளர்ந்த வெண்ணாவல்  மரமே  தல  விருட்சமானதால்  'ஜம்புகேஸ்வரம்'  எனவும்  அழைக்க  படுகிறது.                       (தொடரும்)


No comments: