திருவானைக்கா - அப்பு தலம்
நாட்டை பல்லவி
தாயே நீயே துணை ஜகன்மாதா
வாய்மொழி யாவும் நின்னாமமாஹிட ( தாயே)
அனு பல்லவி
மாயையில் மாந்தர் மூழ்கிடாமலே
சேய்களை காக்க திருவுரு கொண்டாய் ( தாயே)
சரணம் 1
தேய்கின்ற நிலவும் வளர்கின்ற பிறையும்
ஓய்வின்றி சுழலும் இப்புவியும் பகரும்
தூய நின்னடியன்றியே யாவும்
மாய உலகில் நிலையிலாது எனெவே
சரணம் -௨
காயம் இதுவும் பொய் என உரைக்கும்
நேய நின் பதியின் நீர்கொண்ட உறையுள்
தாயுன் கருணை ஞானசக்தி உலகில்
சேய்கள் மெய்ஞானம் பெறவருள் புரியும்
சரணம் -௩
அகிலத்தை காக்கும் அருள்நிறை அன்னையே
சகல உயிர்களும் உன்னருள் பெறவே
நிகரிலா நின்னடி தொழுதோம் தாயே
அகிலாண்டேஸ்வரியே அருள்புரிவாயே (தாயே)

No comments:
Post a Comment