தாயுமானவர்
பல்லவி
மலைக்கோட்டைதனில் மகிழ்வாக அமர்ந்திட்ட மாணிக்க விநாயகனே
நிலையான வளமுடை காவிரியாய் திருச்சிரப்பள்ளியிலே திகழ்பவளே
அனுபல்லவி
மலைப்புதரும் மலையதனின் உச்சிவந்து உன்னடி தொழுவோரை
மனக்கவலை வேரறுத்து மாட்சிமை செய்யும் நின்னடி தொழுதொமே
சரணம்
மகப்பேறு காலமதில் மாதொருத்தி மனமுருகி அழைத்தவுடன்
இகபரம் காக்கும் ஈசனவன் இசைந்தோடி தாயாக உருமாறி
சுகப்ரசவம் ஆகிடவே துணைபுரிந்த நின்தந்தை கோலமதை
நெகிழ்வுடனே தரிசிக்க நின்சந்நிதி அடைந்தோமே அருள்வாய் நீ (மலைகோட்டை) - கலாவதி ரெங்கசாமி .


No comments:
Post a Comment