விநாயகனே வருகவே!
பல்லவி
கழல் பதம் பணிந்தேன் கரிவதனா - கருணை
நிழல் தர வேண்டும் நாயகனே
அனு பல்லவி
அழலென தகிக்கும் துயர் துடைப்பாய்
சுழல் ஞானம் காக்கும் சக்தி மைந்தா
சரணம்
மாய வாழ்வினில் மயங்கியே மாய்ந்திடாது
தூய நின்னடி வணங்குதல் வேண்டுமே
நேயன் நின்னடி நினைத்தலை அன்றியே
சேயன் எனெக்கென்ன வேண்டும் இவ்வுலகிலே (கழல்
-கலாவதி ரெங்கசாமி
(கலாவதி ரெங்கசாமி எழுதிய தேவியர் பெருமை - நவராத்திரி பாடல்கள் என்ற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது அதன் துவக்க பாடல்).


No comments:
Post a Comment